எம்பெருமான் திருநாமங்கள்:
அருள்மிகு வேங்கடாசலபதி, திருவிண்ணகரப்பன், தன்னொப்பாரில்லப்பன், ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், சீனிவாசன், பொன்னப்பன், என்னப்பன், மணியப்பன் என்ற திருநாமங்கள் உள்ளன.
பிராட்டியின் திருநாமங்கள்:
பூமிதேவி, பூதேவி, பூமிநாச்சியார், தரணிதேவி,...எம்பெருமான் திருநாமங்கள்:
அருள்மிகு வேங்கடாசலபதி, திருவிண்ணகரப்பன், தன்னொப்பாரில்லப்பன், ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், சீனிவாசன், பொன்னப்பன், என்னப்பன், மணியப்பன் என்ற திருநாமங்கள் உள்ளன.
பிராட்டியின் திருநாமங்கள்:
பூமிதேவி, பூதேவி, பூமிநாச்சியார், தரணிதேவி, வசுந்தரை என்ற திருநாமங்கள் உள்ளன.
தீர்த்தகுளம்:
இதற்கு பகலிராப் பொய்கை என்று பெயர். மற்ற தலத்து தீர்த்தகுளம் போலன்றி இதில் காலவரையின்றி பகலும், இரவும் நீராடலாம் ஆதலின் இப்பெயர் பெற்றது. இந்த தீர்த்தகுளம் தற்போது திருக்கோயில் திறந்திருக்கும்போது மட்டும் நீராட அனுமதிக்கப்படுகின்றது.
பெருமாள் திரு அவதார தினம்:
எம்பெருமான் ஒரு பங்குனி மாதத்தில் ஏகாதசி கூடிய திருவோண நட்சத்திரத்தில் அவதரித்த நேரமாகிய பகல் 12.00 மணிக்கு திருத்தேருடன் ஒன்பது நாள் திருவிழா பெருவிழா (பிரம்மோற்சவம்) ஆண்டுதோறும் சிறப்பாய் நடக்கின்றது.
திருமணம் புரிந்த நாள்:
எம்பெருமான் பூமிபிராட்டியை ஐப்பசி மாதத்தில் திருவோணத்தன்று மணந்து கொண்டார்.இந்த தெய்வ திருமணத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கித் தற்கால முறைக்கு ஏற்ப பல்வகை இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் 12 நாட்கள் நடைபெற்று வருகிறது
திருக்கோயில் தனிச்சிறப்பு:
உப்பு இல்லாமலே பகவானுக்கு சகல நைவேத்தியங்களும் செய்யப்படுகின்றன. உப்பையோ, அது கலந்த பொருளையோ கருடன் சன்னதிக்கு அப்புறம் ஒருவரும் கொண்டு செல்ல கூடாது. அதைக் கொண்டு போவது பெருமானுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத அவமரியாதையாகக் கருதப்படுகிறது. அதனாலேயே (உப்பை விலக்கிய) லவண வர்ஜித வேங்கடேசன் அதாவது உப்பிலியப்பன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இத்திருக்கோயிலில் தனியாகத் தாயார் சந்நிதி கிடையாது. பெருமாளுக்குப் பக்கத்தில் பூமி நாச்சியார் மட்டுமே உண்டு. பூமி நாச்சியாரைப் பிரிந்து பெருமாள் மட்டும் தனியாக எழுந்தருளுகின்ற வழக்கமே கிடையாது.
வழிபாட்டு நடைமுறை:
இந்த சந்நிதி வடகலை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தது. இதில் ஸ்ரீதேசிகனுக்கு மிக முக்கியத்துவம் உண்டு. பெருமாள் பிராட்டி கண்டருளும் பற்பல உற்சவங்களில் ஸ்ரீதேசிகரும் உடன் எழுந்தருள்வது நெடுநாளைய வழக்கம்.
பூசை செய்முறை:
ஸ்ரீவைகானஸ ஆகம முறைப்படி இவ்வாலயத்தில் பூசைகளும், விசேச உற்சவங்களும் நடத்தப் பெறுகின்றன. தினந்தோறும் ஆறுகால பூசைகள் நடைபெறுகின்றது.
காலையில் முதலில் விசுவரூப சேவை நடக்கும் இத்தலத்து எம்பெருமானுக்கென்றே அமைந்துள்ள சுப்ரபாதம் ப்ரபத்தி மங்களம் இவை விசுவரூப சேவை மையத்தில் எல்லோரும் கேட்டு இன்புறுமாறு ஒலிபெருக்கியின் வாயிலாக ஓதப்படும். மேலும் இலக்குமியின் அம்சமான பசு ஒன்று விஸ்வரூபத்தில் கலந்து கொள்வது தெய்வீகமானது.
1. முதல் காலம் திருப்பாவை வேதம் சாத்துமுறை நடைபெறும்.
2. இரண்டாம் காலமாக பெரிய ஆராதனம் நடக்கும். அப்பொழுது எல்லா சந்நிதிகளுக்கும் நிவேதனம் நடைபெறும்.
3. நண்பகலில் உச்சிக்காலம் நடைபெறும்.
4. மாலையில் நித்யானுசந்தானமும் வேதபாராயணமும் சாத்துமுறையும் நடக்கும்.
5. மாலையில் நடைபெறும் ஐந்தாம் காலம் திருஆராதனை விசேசமாய் நடக்கும். அப்பொழுது மற்ற சந்நிதிகளுக்கும் நிவேதனம் உண்டு.
6. இரவு (இராக்கால பூசை) அர்த்தஜாமம் நடைபெறும்.
இவ்வாறு ஆறுகால பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
ராமநவமி
இத்திருக்கோயிலில் ராமநவமி விழா 11 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. அந்நாட்களில் ராமர், சீதை, இலட்சுமணன், அனுமான் ஆகியோருக்குத் திருமஞ்சனமும், விசேச பூசைகளும் நடைபெறும். நிறைவு நாட்களில் மாப்பிள்ளை அழைப்பு, சீதா கல்யாணம் மற்றும் ராமர் கனகாபிஷேகம், பட்டாபிஷேகம், அனுமன் கனகாபிஷேகம் முதலியன வெகு விமரிசையாய் நடைபெறும்.