தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோயில் 108 திவ்யதேசங்களில் 16வது திவ்யதேசமாகும். வடகலை வைகாணச ஆகமம் பின்பற்றப்படும் வைணவ திருக்கோயில் ஆகும். 5.45மணிக்கு சுப்ரபாதம் பாடப்பெற்று 6.00மணிக்கு பசுவுடன் கூடிய விசுவரூப தரிசனம் நடைபெறுகிறது. காலை 7.30மணிக்கு திருவனந்தல் (திருப்பாவை) காலை 8.00மணிக்கு திருவாராதனம் (காலசந்தி) பூஜையும் நடைபெறுகிறது. அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் மதியம் 12.00மணிக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அன்னதானத் திட்டம் நடைபெற்று வருகிறது. திங்கள் முதல் வியாழன் வரை 100 நபர்களுக்கும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 150 நபர்களுக்கும் வடை, பாயாசத்துடன் கூடிய அன்னதானம் வழங்கப்படுகிறது. நடை திறப்பு நேரம் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாலை...